Online Lessons for Year 10

எனது online பாடங்களுக்கு உங்கள் பிள்ளையைச் சேர்க்க விரும்பினால் தயவுசெய்து எனக்கு ஒரு Text Message அனுப்புங்கள். அதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் தயவுசெய்து வாசியுங்கள். உங்கள் பதில்களை நான் பெற்றவுடன், இந்தப் பாடங்களில் சேர விரும்புவோருக்கு, நான் Login Accounts ஐத் தயார் செய்து, உங்கள் Username ஐயும் உங்கள் Password ஐயும் உங்கள் Email க்கு அனுப்புவேன். Username உம் Password உம் உள்ளவர்கள் மட்டுமே எனது online பாடங்களைப் பார்க்க முடியும். எனது முதலாவது Online பாடத்தை அனைவரும் பார்க்கக்கூடிய விதமாக எனது இணையத் தளத்தில் இணைத்துக் கொள்வேன். நீங்கள் அதனைப் பார்த்த பின்னர், எனது இந்த Online பாடங்களில் நீங்கள் சேர விரும்புகிறீர்களா என்பதை எனக்குத் தெரியப்படுத்தலாம். இன்னும் ஒரு சில தினங்களில், முதலாவது Online பாடம் தயாரானதும் நான் உங்களுக்கு ஒரு Text Message அனுப்புவேன்.

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு மணிநேர வகுப்புகள் நடை பெற்று வந்தன.

Online வகுப்புகள் எப்படி நடைபெற உள்ளன?

  • புதிய Online கற்பித்தலில், ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் அல்லது அதைவிடக்கூடிய நேரம், நான் கற்பிக்க வேண்டியவற்றை வீடியோவாகப் பதிவு செய்து எனது இணையத்தளத்தில் பதிவேற்றுவேன்.
  • இந்த வாராந்த வீடியோ பாடங்களில் தியறி (Theory), பயிற்சித்தாள்களைச் செய்தல் (Doing worksheets) ஆகியவை உள்ளடங்கியிருக்கும்.
  • ஒவ்வொரு வீடியோவும் இணையத்தளத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். சில மாணவர்கள் இந்த வீடியோக்களைப் பார்வையிடாது, நான் நாளை பார்க்கின்றேன், நாளை பார்க்கின்றேன் என்று காலத்தை விரயமாக்குவதைத் தடுப்பதற்காகவே நான் இவ்வாறு செய்யவுள்ளேன்.
  • வீடியோ பாடங்களுக்கான பயிற்சித்தாள்கள், Revision Sheets ஆகியவை தபால் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

Homework and Tests

மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் Homework ஐ முடித்து Online முறையொன்றின் மூலம் அந்த வாரத்திற்குள் என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். நான் மாணவர்களுக்கு Username, Password ஆகியவற்றை வழங்கிய பின்னர், மாணவர்களும் பெற்றோரும் எனது இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பார்க்க முடியும். அந்த வீடியோவில் எனக்கு Homework ஐ சமர்ப்பிக்கும் Online முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கியுள்ளேன். Test களும் இதே வழியில் ஏற்பாடு செய்யப்படும்.

மாணவர்கள் எவ்வாறு சந்தேகங்களைத் தீர்க்க முடியும்?

  • ஒவ்வொரு வாரமும், இரண்டு வெவ்வேறு ஒரு மணித்தியால நேரங்களை, இத்தகைய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கென நான் ஒதுக்க இருக்கின்றேன். (மாணவர்களின் தேவையைப் பொறுத்து இந்த நேரங்கள் பின்னர் கூட்டவோ குறைக்கவோபடலாம்.)
  • சந்தேகங்களை ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே தொலைபேசி மூலமோ அல்லது தேவைப்படின் நான் Whiteboard இல் எழுதி விளக்கமளிப்பதை live-video இல் காண்பிப்பதன்மூலமோ தீர்க்கவுள்ளேன்.
  • இவற்றைத் தவிர, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களின் சந்தேகங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யலாம். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன்.
  • கடந்த 17 ஆண்டுகளாக நான் இங்கிலாந்தில் கற்பிப்பதால், எனது விரிவான அனுபவத்திலிருந்து, பாடங்களின் போது மாணவர்களுக்குப் பொதுவாக எழும் சந்தேகங்கள் எவையென எனக்குத் தெரியும்.
  • அத்தகைய சந்தேகங்கள் எழாத வண்ணமே எனது பாடங்களில் மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்குவது எனது வழக்கமாகும். இதன் விளைவாக, எனது பாடங்களின் போது மாணவர்கள் மிகவும் அரிதாகவே சந்தேகங்களை எழுப்புகிறார்கள். இதன் உண்மைத்தன்மையைப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.

Skype அல்லது Zoom போன்றவற்றைப் பாவித்து நேரடியாகப் பாடங்களை நடாத்துவதற்குப் பதிலாக எதற்காக நான் வீடியோ பாடங்களை நடாத்தத் தீர்மானித்தேன்?

  • பல மாணவர்கள் ஒன்றிணைந்து Zoom அல்லது Skype மூலம் குழு பாடங்களில் (group lessons இல்) உரையாடும்போது அவர்களது தொடர்பாடல்களினால் பல்வேறு சிக்கல்கள் வரக்கூடும் என்று நான் கருதுகின்றேன்.
  • எனது வீடியோ பாடங்களில் இன்னொரு நன்மை என்னவெனில், ஒரு மாணவருக்கு பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் புரிந்துகொள்ள முடியாதிருந்தால், அவர்கள் வீடியோவை இடைநிறுத்தலாம்; சிந்திக்க நேரம் எடுக்கலாம்; வீடியோவில் பின்னோக்கிச் சென்று பாடம் தெளிவாகப்புரியும் வரை மீண்டும் பார்க்கலாம்.
  • அதுமட்டுமன்றி, ஒரு மாணவர் ஒரு பாடப் பகுதியை மீண்டும் படிக்க விரும்பினால், அவருக்கு அந்த வீடியோவை மீண்டும் பார்ப்பதற்கு என்னால் வழிவகை செய்யமுடியும்.
  • குறிப்பாக, பரீட்சைகளுக்கு அண்மையாக, இந்த வீடியோக்கள் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

வகுப்புகளுக்கு கட்டணம் எவ்வளவாக இருக்கும்?

தற்போதைய அசாதாரண சூழலில் கணிசமான எண்ணிக்கையான பெற்றோரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வகுப்புகளுக்கு, எனது வழமையான கட்டணத்தைவிடக் கிட்டத்தட்ட 50% குறைவான கட்டணத்தையே நான் அறவிட உள்ளேன். இதன்படி Year 10 வகுப்புகளுக்கு,

  • ஒரு பாடத்திற்கு மட்டும் (Maths only or Physics only) வரும் மாணவர்களுக்கு வாரத்திற்கு £8 வீதமும்
  • இரண்டு பாடங்களிற்கும் வரும் மாணவர்களுக்கு வாரத்திற்கு £16 ( 2 x £8 = £16) வீதமும்

கட்டணம் அறவிட உள்ளேன். தபால் மூலம் அனுப்பப்படவுள்ள பயிற்சித்தாள்களுக்கு வேறாகக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது.

தற்போதைய சூழ்நிலையால், மிகக் கடுமையான நிதிச் சிக்கல்களை யாராவது பெற்றோர் எதிர் நோக்குவதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இந்த கட்டணத்தை செலுத்துவது கடினம் எனத் தயங்கினால், தயவுசெய்து என்னுடன் பேசுங்கள். உங்கள் பிள்ளைக்கு நான் இந்தப் பாடங்களை இலவசமாக வழங்குவேன் (தபாலில் அனுப்பும் பயிற்சித் தாள்கள் உட்பட). தயவுசெய்து, தற்போதைய நெருக்கடி உங்கள் பிள்ளையின்படிப்பை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.

Online Lessons இல் இணைந்துகொள்ளாவிட்டால் உங்கள் பிள்ளையின் இடம் எனது Tuition இல் இல்லாது போய்விடுமா?

உங்கள் பிள்ளையின் இடம் இல்லாது போய்விடாது. அந்த இடத்தை நான் வைத்திருப்பேன். நிலைமை சீரடைந்து, மறுபடியும் வகுப்புகள் எனது Tuition Centre இல் ஆரம்பித்த பின்னர், நீங்கள் மீண்டும் இணைந்து கொள்ளலாம். ஆயினும், தற்போதைய தகவல்களின்படி இந்த lock-down குறைந்தது September மாதம் வரை கூட நீடிக்கலாம் எனத் தெரிகின்றது. எனவே, உங்கள் பிள்ளை Online வகுப்புகளில் தவறவிடப்போகும் விடயங்களை என்னால் மீண்டும் கற்பிக்க முடியாதிருக்கும். காரணம் என்னவெனில், Syllabus ஐ முடிப்பதற்கு, அதன் பின்னர் காலம் போதாமல் இருக்கும் என்பதேயாகும்.

இந்த online lessons தொடர்பாக எதையும் நீங்கள் பரிந்துரைக்க விரும்பினால் அல்லது உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Thank you.
Navu